1. மறக்க முடியாதவர்களை மன்னித்து விடுங்கள்...
மன்னிக்க முடியாதவர்களை மறந்து விடுங்கள்...
2. இருப்பதை வைத்து சிறப்பாய் வாழ்வது திறமை
இல்லாத போது அமைதியாய் வாழ்வது அருமை
திறமையோடு அருமையாகவும் அன்பாகவும்
செயல்பட்டால் அது தான் வாழ்க்கை...
3. வார்த்தைகளால் வதம் செய்யாதீர்கள்...
வாழத்தான் பிறந்துள்ளோம்...
பிறரை வதைக்க அல்ல...
4. வலி எப்போதும் கண்ணீரில் வெளிப்படுவதில்லை...
பல நேரங்களில் புன்னகையில் வெளிப்படுகிறது...
வலியை கண்ணீரில் கறைப்பவனுக்கு அது முதல்முறை...
புன்னகையால் மறைப்பவனுக்கு அது பல முறை...
5. தோல்வி உன்னை சுற்றி வலம் வந்தால்...
புன்னகை என்னும் ஆயுதத்தை
கைவசம் வைத்துக்கொள்...
தன்னம்பிக்கை தானாய் வரும்...
6. எதிர்பார்த்த மாதிரி வாழ்க்கை
எல்லாருக்கும் அமையாது,
ஆனால்
நாம் முயற்சி பன்னுனா கண்டிப்பாக
நம்ம எதிர்பார்த்த மாதிரி மாத்தமுடியும்...!
7. இனி இது தேவை இல்லை
என தூக்கி எறியப்படும் ஒன்று
வேறு ஒருவருக்கு "பொக்கிஷமாகிவிடுகிறது"
அது பொருளானாலும் சரி... மனசனாலும் சரி...
8. சிலரை பிடிக்காது என்றாலும் வெறுக்க முடியாது
சிலரை பிடிக்கும் என்றாலும் நெருங்கிட முடியாது
புரிதல் ஒன்றே அன்பை உணர்த்தும்...!
9. வாழ்கையில் ஒருவர் பெருமை படுத்தினால்
அவர் கரம் பற்றி முன்னேறுங்கள்.
சிறுமைப் படுத்தினால்
கை கழுவி விட்டு முன்னேறுங்கள்.
10. அன்பு என்றாலே அழகு தான்...
பாசம் என்றாலே மகிழ்ச்சி தான்...
இரண்டும் கிடைத்தால் வாழ்க்கை...
எப்போதும் சிறப்பு தான்...
11. வாழ்க்கைல முன்னேற காதல் ரொம்ப அவசியம்
அது நம்ம வாழ்க்கை மீதான காதலா இருக்கணும்
இல்லைன்னா கடைசி வரை
கடைசில தான் நிக்கணும்...
No comments:
Post a Comment