1. உன் கைபிடிக்கும் பாக்கியம் கிடைக்க வில்லை எனக்கு இருந்தும் தினம் உன் கைகோர்த்து உலவுகிறேன் கனவில்
2. என் வாழ்வில்
நீ இல்லை என்று அழுவதா...?
அல்லது
என் நினைவில் நீ வாழ்கிறாய் என்று சிரிப்பதா...?
இது வலியா சுகமா புரியவில்லையடி...!
நீ கொடுத்து சென்ற நினைவுக்கு நன்றி...!
3. உன்னால் என்றுமே திருப்பித்தர முடியாத ஒன்று
உன்னுள் தொலைத்த என் நியாபகங்கள்...!!!
4. நீ என்னை வெறுத்த போதும்
நான் உன்னை நேசிக்கின்றேன்
உன்னை நேசிக்க தெரிந்த எனக்கு
உன்னை மறக்க தெரியவில்லை
வழி ஒன்று சொல்வாயா உன்னை மறந்து
என் இதயத்தின் பாரத்தை குறைக்க...
5. ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் நினைவுகள் என்னை தொடும் பொழுது
நான் என்னை மறந்து விடுகிறேன்
6. இரவின் அடையாளமே
இதயத்தின் அழியா தடமே
ஒருநாள் மலரே மறுநாள் கனவே
இதயம் துடிப்பதை நிறுத்தும் முன் கண்களில்
ஒருமுறை நீ உதிப்பாய் என்று என் இதயம் காத்துகிடக்கிறது...
உன் வரவிற்காக...!!
7. எங்கு ஒழிந்து கொண்டாலும்
உன் நினைவுகளிடம் இருந்து
தப்பிக்க முடிவதே இல்லை
தினம் இதயத்தில் ரணமாய்
8. ஞாபகங்கள் அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக விதைக்கப்படுகின்றன...
9. இரவில் நிலவின் துணையோடு
உன் கைகோர்த்து நடந்த நினைவுகள்
இன்றும் என் மனதை கனமாக்கி
இதயத்தை ரனமாக்குகிறது
10. என்ன செய்கிறேன் என்று
புரிவதில்லை பல நேரம்
இருந்தும் அழகாக போகிறது நாட்கள்
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்
11. கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்த்து
ரசிக்கின்றேன்
வந்தது நீயல்லவா
கண்களுக்குள்
12. உன்னை
நினைக்கும் போது
எந்த கஷ்டமும்
தெரியவில்லை
உன்னை
மறக்க நினைக்கும்
போது தான்
அதன் கஷ்டம்
தெரிகின்றது
13. ஒரு இதயம்
போதாது
நீ
தந்த வலிகளை
சுமக்க..!
14. இரண்டு விழிகள்
பத்தாது அதை நினைத்து
கண்ணீர் வடிக்க...
15. அன்பே நீ எனக்காக பிறக்க வில்லை
உன் நினைவுகள் தான் எனக்காக பிறந்தவை...
நீ பிரிந்தும் உன் நினைவுகள்
என்னை விட்டு பிரியாமல் இருக்கிறது..
16. ஞாபகங்கள்
அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக
விதைக்கப்படுகின்றன...
17. அழகே
விடிந்தும்
விடியாத
பொழுது
போல உந்தன்
நினைவுகள்
No comments:
Post a Comment