1. மற்றவர்களை கஷ்டப்படுத்தும் போது
சுகமாக தான் இருக்கும்...
ஆனால், நாம் கஷ்டப்படும் போது தான் தெரியும்
அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என...
2. உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்.
பணம் கொடுத்து உயர்த்தி விட முடியாவிட்டாலும் பரவாயில்லை.
உன்னால் முடியும் என்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை கொடுங்கள்.
உங்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவரை ஒரு படி மேலே உயர்த்தும்..!!
3. பேனாவை எழுதி பார்த்து வாங்கியவர்களை விட
கிறுக்கி பார்த்து வாங்கியவர்கள் தான் அதிகம்
அது மாதிரி தான் வாழ்க்கையும்
பேசி பார்த்து பழகியவர்களை விட
இனையத்தில் பழகியவர்கள் தான் அதிகம்...
4. இல்லாமல் இருந்ததற்கும்
இருத்ததை இழந்ததற்கும்
இடைப்பட்டதே இந்த வாழ்க்கை...!
5. ஒரு வீரன் இன்னொரு வீரனால்
வீழ்த்தப்பட்டால் அது தோல்வி...
துரோகத்தால் வீழ்த்தப்பட்டால்
வீழ்ந்தவனே வெற்றியாளன்...
6. நம் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்றால்
மனசு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்கிறதே தவிர
அவர்களின் மீதான நேசம் கொஞ்சமும் குறைவதில்லை....
7. ஒவ்வொரு செயலுக்கும்
காலம் பதில் தந்து கொண்டுதான் இருக்கிறது...
ஆனால், மனிதன் தான் அதை உணர்வதே இல்லை...!
8. கெஞ்சி கிடைக்க கூடாதது - காதல்
பிச்சை எடுக்க கூடாதது - அன்பு
கேட்டு பெற கூடாதது - அக்கறை
புரிய வைக்க கூடாதது - உணர்வுகள்
9. வலிக்கும் போது
வலிக்காதது போல் நடிப்பது
வலிகளில் கொடியது
10. பழகும் முன் தனிமை பழகிய பின் இனிமை...
பிரிவு என்பதோ கொடுமை...
பிரிந்தால் தான் தெரியும் உறவின் அருமை...
11. யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை என்றால்
நீ இன்னும் நடிக்க கற்று கொள்ளவில்லை
என்றே அர்த்தம்...!
12. பேசாத வார்த்தைக்கு
நீ எஜமான்...!
பேசிய வார்த்தைகள்
உனக்கு எஜமான்...!
13. நெருப்பை அணைக்க முடியும்..!
புகையை என்ன செய்ய போகிறாய்..?
உன் கோபத்தை தீர்த்துக்கொள்ள முடியும்..!
கோபத்தால் வந்த சேதத்தை என்ன செய்ய போகிறாய்..?
14. இந்த உலகில் மகிழ்ச்சியை தொலைத்தவர்களும்...
தோல்வி அடைந்தவர்களாகவும் இருப்பவர்கள்...
அனைவரும் ஒவ்வொரு செயலை செய்யும் போதும்...
பிறர் என்ன நினைப்பார்கள் என எண்ணக்கூடியவர்களே...
15. வாழ்கையை நாம் வெறுத்தால்
வாழ்கை நாம்மை வெறுத்து விடும்..!
16. கடினமான செயலின் சரியான பெயர்
'சாதனை'
சாதனையின் தவறான விளக்கம்
'கடினம்'
17. தோல்விகளும்,துரோகங்களும்
கடைசியாக கற்றுக்கொடுப்பது...!
நாமும் சுயநலமாக இருந்திருக்கலாம் என்பதே...!
18. சில உறவுகள் காயப்படக்கூடாது என்பதற்காகவே
பல இடங்களில் நாம் காயப்பட்டு நிற்கிறோம்...
19. தாயின் கருவறையை
பார்த்த பின்பு தான் ஓர் முடிவுக்கு வந்தேன்
இருள் நிறைந்திருப்பது நரகத்தில் மட்டுமல்ல
சொர்க்கத்திலும் தான் என்று...!
20. நல்ல நாட்களை சந்திக்க.சில மோசமான
நாட்களை கடந்து தான் ஆக வேண்டும்...
நல்ல மனிதர்களை அடையாளம் காண
சில மோசமான மனிதர்களை கடந்து தான் ஆக வேண்டும்...
No comments:
Post a Comment